தண்ணீர் மனித வாழ்வின் உயிர்நாடி அனைவரும் அறிந்ததே.பின் ஏன் நமக்கு நீரின் முக்கியத்துவம் தெரிவதில்லை. காலம் பொன் போன்றது அது போல நீரும் பொன் போலத்தான். வாழ்வின் ஆதாரம் ஆயிற்றே. அதனால் ஒவ்வொரு தனிமனிதனும் அதை உணர்ந்து தனது ஒவ்வொரு நாளும் நீரின் சிக்கன முறையை பின்பற்றி வருதல் மிகவும் அவசியமாகும். முதலில் தன் பயன்பாடுகளில் அதை செயலாக்க வேண்டும். தேவைக்குட்பட்டு நீரை பயன்படுத்த வேண்டும். தண்ணீர் குழாயை திறந்து நீரை பயன்படுத்லாகாது. பாத்திரத்தில் நீரை நிரப்பிக்கொண்டு அதன்பின் பயன்படுத்தினால் சரியாக இருக்கும். இதற்கு அப்பால் ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய விசயம் நீரை எப்படி சேமிப்பது என்பது தான். மழை நமக்கு நிறையவே பொழிகிறது.. அதை நாம் சேமிக்க பழக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புக்கு வேண்டிய ஏற்ப்பாட்டை தனக்குத் தானே முன்வந்து வீட்டின் உரிமையாளர் அதைகொள்ளளாம் செய்தல் வேண்டும். அடுத்ததாக ஒரு குழுவை அமைத்து கலந்தாலோசித்து தன் இருப்பிடத்தின் அருகாமையில் உள்ள குளம். ஏரி. வாய்க்கால் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தூர்வாரும் பணியை மேற்க் கொள்ளலாம். இது ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறப்பானது.
No comments:
Post a Comment