Wednesday, 22 April 2020

Manidhanin vazhkkai

மனிதனின் வாழ்க்கை
ஏதோ பிறந்தோம் ஏதோ வாழ்கிறோம் என்று தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு நாம் என்ன செய்கின்றோம், என்ன பேசுகிறோம், எப்படி பழகுகிறோம் , எப்படி வாழ்கின்றோம் என்றெல்லாம் நாம் சிந்திப்பதில்லை.  நமக்கு கீழ் உள்ள மக்களின் வாழ்க்கையைப் பற்றியெல்லாம் நாம் நினைப்பதில்லை. அது மட்டுமா நாம் நம்மைப் பற்றிக்கூட நினைப்பதில்லை. அப்படியென்றால் நாம்  என்னதான் செய்கின்றோம். அதைத்தான் இப்போது சொல்லவருகிறேன. நமது வாழ்வில் நாம் துவக்க காலத்தில் அதாவது திருமணம் முடிந்து நம் புது இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம் என்றால், நம்முடைய அத்தியாவசிய  தேவைகளை புரிந்து அதற்கேற்ப நம் செலவுகள் அமைய வேண்டும் அல்லவா?  அப்படி  செய்கிறோமா ? இல்லையே,  நம்மை பற்றி அறிந்தால் நாம் அப்படி செய்வோம், ஆனால் நாம் பக்கத்த வீட்டைச் பற்றி அல்லவா நினைத்து க் கொண்டிருக்கிறோம், எப்படி என்றால் அவன் வீட்டில் எவ்வளவு பெரிய அளவில் தொலைக்காட்சி வைத்திருக்கிறார் அதைவிட சற்று பெரிய தாக நான் வாங்குவேன். என்றுதானே நினைக்கிறோம். அப்படி நினைக்கும் பட்சத்தில் நம் செலவு‌ நம் சக்தியை மீறிச் செல்லும் அல்லவா? ஆகையால் நாம் அந்த தொலைக்காட்சி பெட்டியை மாத தவணை முறையில் வாங்க நேரிடும். இப்படி பட்ட வாழ்க்கையை தான் நாம் எல்லா விசயத்திலும் கடைபிடித்து வாழ்க்கையின் இன்பத்தை தொலைக்கினறோம்.

Monday, 20 April 2020

அமைதியான நிலையில்
இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் நாம் சிந்திக்க நிறைய விக்ஷயஙகள் உள்ளன.  மனித நேயத்துடன் சிந்திக்க வேண்டும். உலகத்தின் வாழ்வாதாரம். இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகள். அவை என்னென்ன என்று பார்த்தோமானால் கதிரவன் ஒளி, ஆம் நமக்கு கிடைத்த வரம். அடுத்து மழை, மழையால் பெருக்கெடுக்கும் ஆறு, நிரம்பி வழியும் ஏரிகள், குளங்கள், நீர் நிரம்பிய அணைகள் இப்படி ஆகிய நீர் ஆதாரம் மற்றும் அழகிய மலைகள்,  காடுகள், பச்சை பசேலென்ற வயல்கள் இவை அனைத்தும் இறைவனால் நமக்கு அளிக்கப் பட்டுள்ள நன்கொடை ஆகும். நாம் அதை வணங்கி போற்றி வழிபடுவது நமது தலையாய கடமை ஆகும். இயற்கையை  வணங்குவது இறைவனை வணங்குவதற்கு ஒப்பாகும்.  அவ்வாறாக நாம் செயதோமானால் அந்த இயற்கை நமக்கு என்றென்றும் உறுதுணையாக இருந்து பல வகையிலும் நம்மை காப்பாற்றும்.  இதுவே இன்றைய சிந்தனை ஆகும்.
தண்ணீர்  மனித வாழ்வின் உயிர்நாடி அனைவரும் அறிந்ததே.பின் ஏன் நமக்கு நீரின் முக்கியத்துவம் தெரிவதில்லை. காலம் பொன் போன்றது அது போல நீரும் பொன் போலத்தான். வாழ்வின் ஆதாரம் ஆயிற்றே. அதனால் ஒவ்வொரு தனிமனிதனும் அதை உணர்ந்து தனது ஒவ்வொரு நாளும் நீரின் சிக்கன முறையை பின்பற்றி வருதல் மிகவும் அவசியமாகும். முதலில் தன் பயன்பாடுகளில் அதை செயலாக்க வேண்டும். தேவைக்குட்பட்டு நீரை பயன்படுத்த வேண்டும். தண்ணீர் குழாயை திறந்து நீரை பயன்படுத்லாகாது. பாத்திரத்தில் நீரை நிரப்பிக்கொண்டு அதன்பின் பயன்படுத்தினால்  சரியாக இருக்கும். இதற்கு அப்பால்  ஒவ்வொரு மனிதனும் செய்யக்கூடிய விசயம் நீரை எப்படி சேமிப்பது என்பது தான். மழை நமக்கு நிறையவே பொழிகிறது.. அதை நாம் சேமிக்க பழக வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்புக்கு வேண்டிய ஏற்ப்பாட்டை தனக்குத்  தானே முன்வந்து வீட்டின் உரிமையாளர் அதைகொள்ளளாம் செய்தல்  வேண்டும்.  அடுத்ததாக  ஒரு குழுவை அமைத்து கலந்தாலோசித்து தன் இருப்பிடத்தின் அருகாமையில்  உள்ள குளம். ஏரி. வாய்க்கால் போன்ற இடங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தூர்வாரும் பணியை மேற்க் கொள்ளலாம். இது ஒவ்வொரு தனி மனிதனும் சிந்தித்து செயல்படுவது மிகவும் சிறப்பானது.

Tuesday, 18 February 2020

தூய்மை என்றும் இனிக்கும். முதலில் மனத்தூய்மை அதன்பின் புறத்தூய்மை.. ஒரு மனிதனின் மனமானது தன்னுடைய நலம் மட்டும் பேனாமல் பிறர் நலத்திலும சிறிது அக்கரை எடுத்து வாழ்க்கை வாழ்வதே தன்னுடைய மனத்தூய்மை யின் வெளிப்பாடு ஆகும். அவ்வாறு வாழும் வாழ்க்கை யே சிறப்பானது. அதில் முதன்மையானது தாய் தந்தையர் நலன் பாராட்டுதல். சிறு குழந்தை பிராயத்தில் நம்மை சீராட்டி பாராட்டி அன்பு காட்டி வளர்த்து நம்மை பெரிய அளவில் இந்த உலகத்தில் அறிமுகம் செய்த பெற்றோர்களை நாம் எந்த அளவுக்கு சீராட்டுகிறோம் என்று சற்று யோசிக்க வேண்டும். ஆம் . எப்படி என்றால் தாய் தந்தையரின் தினசரி வாழ்க்கையில் அவர்களுக்கு தேவையானவற்றை செய்தல் வேண்டும். அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய விசயங்களை கவனித்து செய்தல். தகுந்த நேரத்தில் உணவு கொடுத்து கவனித்தல். உடை பராமரித்தல். பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடித்தல். பக்தி உலா அழைத்துச் செல்தல். நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாடல் செய்தல். மிக மகிழ்ச்சி யுடன் கவனித்தல். இதுதான் சிறப்பானது.