Tuesday, 18 February 2020

தூய்மை என்றும் இனிக்கும். முதலில் மனத்தூய்மை அதன்பின் புறத்தூய்மை.. ஒரு மனிதனின் மனமானது தன்னுடைய நலம் மட்டும் பேனாமல் பிறர் நலத்திலும சிறிது அக்கரை எடுத்து வாழ்க்கை வாழ்வதே தன்னுடைய மனத்தூய்மை யின் வெளிப்பாடு ஆகும். அவ்வாறு வாழும் வாழ்க்கை யே சிறப்பானது. அதில் முதன்மையானது தாய் தந்தையர் நலன் பாராட்டுதல். சிறு குழந்தை பிராயத்தில் நம்மை சீராட்டி பாராட்டி அன்பு காட்டி வளர்த்து நம்மை பெரிய அளவில் இந்த உலகத்தில் அறிமுகம் செய்த பெற்றோர்களை நாம் எந்த அளவுக்கு சீராட்டுகிறோம் என்று சற்று யோசிக்க வேண்டும். ஆம் . எப்படி என்றால் தாய் தந்தையரின் தினசரி வாழ்க்கையில் அவர்களுக்கு தேவையானவற்றை செய்தல் வேண்டும். அவர்களுக்கு வேண்டிய அத்தியாவசிய விசயங்களை கவனித்து செய்தல். தகுந்த நேரத்தில் உணவு கொடுத்து கவனித்தல். உடை பராமரித்தல். பழங்கள் மற்றும் காய்கறிகள் சேர்த்து ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடித்தல். பக்தி உலா அழைத்துச் செல்தல். நேரம் ஒதுக்கி அவர்களுடன் கலந்துரையாடல் செய்தல். மிக மகிழ்ச்சி யுடன் கவனித்தல். இதுதான் சிறப்பானது.